மாண்டஸ் புயலால் 1,134 மின் கம்பங்கள் மட்டுமே சேதம்: அமைச்சர் செந்தில்பாலாஜி

By செய்திப்பிரிவு

சென்னை: மாண்டஸ் புயலால் 1,134 மின் கம்பங்கள் மட்டுமே சேதம் அடைந்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் கடந்த டிசம்பர் 10-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சூறவாளிக் காற்று வீசியது. அதிக எண்ணிக்கையில் மரங்கள் விழுந்தன.

இந்நிலையில், மாண்டஸ் புயலால் 1,134 மின் கம்பங்கள் மட்டுமே சேதம் அடைந்ததாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல்வரின் சீரிய அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் பராமரிப்பு பணிகளாலும், மாண்டஸ் புயலால் 1134 மின் கம்பங்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன. 2011-ம் ஆண்டு தானே புயலால் 52,000 மின் கம்பங்கள் சேதம். 2016 ம் ஆண்டு வர்தா புயலால் 49,100 மின் கம்பங்கள் சேதம். 2017-ம் ஆண்டு ஒக்கி புயலால் 15,858 மின் கம்பங்கள் சேதம். 2018-ம் ஆண்டு கஜா புயலால் 3.30 லட்சம் கம்பங்கள் சேதம். 2020-ம் ஆண்டு நிவர் புயலால் 8,000 மின் கம்பங்கள் சேதம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேனினும் இனிய தமிழ் பேசிடும் மக்கள், வானினும் உயர்வாக வணங்கிடும், மாண்புமிகு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் சீரிய அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் பராமரிப்பு பணிகளாலும், மாண்டோஸ் புயலால் 1134 மின் கம்பங்கள் மட்டுமே (1/2)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE