பிரதமர் மோடியின் தாயார் மறைவு - தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்: நூற்றாண்டுகள் வாழ்ந்து, பாரதத்திற்கு தலைசிறந்த தவப் புதல்வனாக நம் பாரத பிரதமரை தாய்நாட்டிற்காக அர்ப்பணித்து, நம் பாரத பிரதமரின் அங்கத்தில் சுவாசமாக திகழ்ந்து உலகம் போற்றும் உன்னத மாமனிதனை ஈன்றெடுத்த தாய் ஹீராபென் மோடியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மறைந்த அன்பு தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். இந்த கடினமான சூழலில் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு(பிரதமர் மோடிக்கு) உறுதுணையாக செயல்படுவோம். ஓம் சாந்தி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: பிரதமரின் தாயார் இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர் செல்வம்: பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் தாயார் ஹீராபென் மோடியின் ஆன்மா சாந்தியடையட்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு(பிரதமர் மோடிக்கு) பக்கபலமாக இருப்பார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: பிரதமர் நரேந்திர மோடியின் அன்புத் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள் நூறாண்டுகள் வாழ்ந்து, மறைந்திருக்கிறார். இந்த துக்கச் செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக் கூடிய மனவலிமையையும் உறுதியையும் இயற்கை உங்களுக்கு(பிரதமர் மோடிக்கு) வழங்கட்டும். எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அம்மையார் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நரேந்திர மோடியின் வாழ்வில் அவரது தாயார் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை நான் அறிவேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் அன்பு தாயார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.எளிமையான, நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து,எல்லோருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு அவரது தாயார் தார்மீக பலமாக திகழ்ந்தார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. நரேந்திர மோடியின் வாழ்வில் அவரது தாயாரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. பிரதமருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்