தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு ஜன.1 முதல் டிஜிட்டல் வருகை பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டம் ஜன. 1 முதல் டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்தியில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசால் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலையும் அதற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 214 ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. தேசிய மொபைல் கண்காணிப்பு முறை மூலம் இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன்மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்நடைமுறைகளை அனைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களும், ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி செயலர்களும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் பணித்தள பொறுப்பாளர்களும் தவறாமல் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்