நெல்லை, தென்காசியில் பரவலாக மழை: பழைய குற்றாலம் அருவியில் சிறுமி மீட்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

இரு மாவட்டங்களிலும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம் ஊத்து- 99, மாஞ்சோலை- 62, காக்காச்சி- 58, நம்பியாறு- 46, கன்னடியன் அணைக்கட்டு- 26, பாபநாசம் மற்றும் நாலுமுக்கு பகுதியில் 24, சேரன்மகாதேவி- 20, மணிமுத்தாறு- 18.60, அம்பாசமுத்திரம்- 18, சேர்வலாறு- 12, கொடுமுடியாறு- 10, மூலக்கரைப்பட்டி- 6, களக்காடு- 5.40, பாளையங்கோட்டை- 4, ராதாபுரம்- 3.60, நாங்குநேரி- 3, திருநெல்வேலி- 1. தென்காசி மாவட்டத்தில் ராமநதி- 24.30, கடனா- 15, செங்கோட்டை மற்றும் கருப்பாநதியில் தலா 8.80, ஆய்க்குடி- 8, தென்காசி- 3, அடவிநயினார்- 1.

அணைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து கணிசமாக உள்ளதை அடுத்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 96.70 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் 98.85 அடியாகவும், சேர்வலாறு நீர்மட்டம் 108.07 அடியிலிருந்து 109.02 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம் 90.40 அடியிலிருந்து 91.85 அடியாகவும் உயர்ந்திருந்தது.

குற்றாலத்தில் சிறுமி மீட்பு: தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை சக சுற்றுலா பயணி ஒருவர் துரிதமாக மீட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தென்காசி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றாலம் அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினர் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக நேற்று வந்தனர். பழைய குற்றாலம் அருவியில் அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் 4 வயது பெண் குழந்தை கமலினி எதிர்பாராத வகையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாள்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்கவே, அருவியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டார். அருவித் தண்ணீர் வழிந்தோடும் தடாகத்தில் உடனடியாக இறங்கினார். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை மீட்டார். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அக்குழந்தை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். குழந்தை மீட்கப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்