தமிழக சிறைகளில் பாதுகாப்பு கருதியும், கைதிகளுக்கு இடையே மோதல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கிலும் தண்டனை மற்றும் நீண்ட நாள் கைதிகள், காவலர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் புழல் உட்பட 10 மத்திய சிறைகளும், புழல், வேலூர், கடலூர், கோவை, திருச்சி, மதுரையில் மத்திய சிறைகளுடன் இணைந்த பெண்கள் சிறைகளும் செயல்படுகின்றன. மேட்டுப்பாளையம், சாத்தூர் தவிர பெண்கள் கிளைச் சிறைகளில் 8 சிறைகள் தொடர்ந்து செயல்பாட் டில் உள்ளன. இவை தவிர, நூற் றுக்கும் மேற்பட்ட கிளைச் சிறை கள் உள்ளன.
அனைத்து சிறைகளிலும் தற்போது தண்டனை, விசாரணை, தீவிரவாதிகள் என, 15 ஆயிரம் பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் தினமும் 200 முதல் 300 விசாரணைக் கைதிகள் ஜாமீனில் செல்வதும், குற்றச் செயலில் ஈடுபட்டு அதே எண்ணிக்கையில் உள்ளே வருவதாகவும் சிறைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழக சிறைகளில் பாதுகாப்பு நலன் கருதி தண்டனை, நீண்ட நாள் கைதிகள் மற்றும் காவலர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகளாக சுமார் 4,500 பேர் வரை உள்ளனர். இதில் 168 பேர் பெண்கள். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நீண்ட நாள் கைதிகள்.
இவர்களுக்கும், 3,500-க்கும் மேற்பட்ட சிறைத்துறை காவலர் கள், அதிகாரிகளுக்கும் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டம் உள்ளது. இதன்மூலம் சிறைக்குள் ஒரு பிளாக் கில் இருந்து அடுத்த பிளாக்குக்கு தேவையின்றி ஒரு கைதி செல்ல முடியாது. அதற்கான காரணம் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். மருத்துவமனை, நூலகம் உட்பட எங்கு சென்றாலும் பதிவு செய்ய வேண்டும். வளாகத் துக்குள் காவலர்கள் தினமும் 30-40 இடங்களுக்குச் சென்று கைதிகளைக் கண்காணிக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த சுவர்களில் ஒட்டியுள்ள பேப்பரில் கையெழுத்திட வேண்டும்.
இனிமேல் ‘ஸ்வைப்’ இயந்திரத்தில் அவர்கள் கைரேகை பதிவு செய்யும் சூழல் வரும். ஒரு கைதி வாரத்தில் குறிப்பிட்ட தொகைக்கு வளாகத்துக்குள் உள்ள கடையில் சோப் உட்பட அடிப்படை பொருட் களை வாங்கலாம். இதற்காக ஒவ்வொரு கைதிக்கும் ஒரு அட்டை பின்பற்றப்படுகிறது. இதில் உறவினர், நண்பர்கள் மூலம் பணம் வரவு வைக்கப்படும். இது ஒவ்வொரு கார்டுக்கும் மாறுபடும்.
காவலர், அலுவலர்கள் கைதி கள் அறை கதவுகளைத் திறக்க கார்டு அவசியமாகும். ஒரு கைதி மற்றொரு கைதி அறையை திறக்க இயலாது. தேவைப்படும்போது மட்டுமே சம்பந்தப்பட்ட கைதி அறைக்குப் போக முடியும். அனைத்து நடவடிக்கைகளும் ‘ஸ்மார்ட் கார்டு’க்கு மாறும்போது, நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்சினைகள் தவிர்க்கப்படும். சிறைகளின் பாதுகாப்பு மேம்படும்.
இதுகுறித்து சிறைத்துறை தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago