சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதன் முழுக்கொள்ளளவான 120 அடியில் கடந்த 7-ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக 22 நாட்களாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும் டெல்டாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று விநாடிக்கு 5,400 கனஅடியாக இருந்த நீர் வரத்து, இன்று 5,643 கனஅடியாக சற்று அதிகரித்தது. இந்த நீர் வரத்தில், டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதமும், அணையின் கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு 5 ஆயிரம் கனஅடி என்ற அளவில் இருந்து இன்று மாலையில் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் கால்வாய் பாசனத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 400 கனஅடியாக நீடிக்கிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்த நிலையில், அணைக்கான நீர் வரத்தை விட, பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் 120 அடியில் இருந்து இனி குறையத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
» தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை - பாபநாசத்தில் வெல்லம் ஏலம்
» புத்தாண்டுக் கொண்டாட்டம் | சென்னையில் விடுதிகளுக்கு காவல் துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago