“நான் 2022-ல் பயணித்தது 8,549 கி.மீ... பங்கேற்ற நிகழ்ச்சிகள் 647” - முதல்வர் ஸ்டாலின் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: 2022-ம் ஆண்டில் 8,549 கிலோ மீட்டர் பயணம் செய்து ஒரு கோடி பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் 2022-ம் ஆண்டு செய்த பயணங்கள் தொடர்பாக பேசினார். இதன் விவரம், "நேற்றைய தினம் நான் மாலையில் என் இல்லத்தில் அமர்ந்திருந்த நேரத்தில், என்னுடைய உதவியாளர்கள் ஒரு தாளை கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்கள். என்ன என்று படித்துப் பார்த்தேன். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் நான் தமிழகத்தில் இருக்கக் கூடிய மாவட்டங்களில் பயணம் செய்தது, 8,549 கிலோ மீட்டர் தூரம். அந்தப் பயணத்தில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்- 647. இதில் 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். கட்சி நிகழ்ச்சிகள்- 96.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காரணத்தால், அதில் பயனடைந்தவர்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 நபர்கள். ஓராண்டு காலத்தில் ஒரு கோடி பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு வருடத்தில். இதற்கு மத்தியில், எனக்கு கரோனா பாதிப்பு வந்தது, சிறிது உடல் நலிவுற்றேன், கால் வலி வந்தது, சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்தச் சூழ்நிலையில் கூட என்னுடைய பயணம் தடைபடவில்லை, மக்கள் பணி நிற்கவில்லை, நிற்கவில்லை என்பதல்ல நிற்கவே நிற்காது. அதுதான் உண்மை.

நம்பர் ஒன் முதல்வர் என்பதாக இருந்தாலும், நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதாக இருந்தாலும் - அதனுடைய உண்மையான அளவுகோல் என்ன? ஏழைகளின் சிரிப்பும் - இங்குள்ள நான் காணக்கூடிய மகளிரின் மகிழ்ச்சியும்தான் அதற்கு உண்மையான அளவுகோல்.

மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் - அவர்களது மனது நிறைந்தால் போதும். இதனைத்தான் “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா. நான் சொல்வது, “ஏழையின் சிரிப்பில் பேரறிஞர் அண்ணாவையும் கருணாநிதியையும் காண்போம்” என்பதுதான் என்னுடைய கொள்கை. மக்களின் அரசு இது! மக்களுக்கான அரசு இது. இந்த சாதனைகள் தொடரும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்