புதுச்சேரியில் பொங்கலுக்குள் ஏழைப் பெண்களுக்கான ரூ.1,000 உதவித்தொகை திட்டம் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அரசின் எந்த உதவியும் பெறாத 13,000 ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை தரும் திட்டம் பொங்கலுக்குள் தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறியது: “அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம். இத்திட்டம் வரும் பொங்கலுக்குள் தொடங்கப்படும். அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவையும் ஜனவரி முதல் தரப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரினர். இதையேற்று பால் கொள்முதல் விலை ரூ.34ல் இருந்து ரூ.37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அத்துடன் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தரப்படும் ஐந்து சதவீத ஊக்கத்தொகை இனி மாதந்தோறும் தரப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தீவனம் தருவதற்காக அவர்களின் வங்கிகணக்கில் பணம் செலுத்தவுள்ளோம். இதற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கியுள்ளோம்.

விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செய்து பாண்லேக்கு தந்தால் 50 சதவீத மானியம் தருவோம். இதற்கு முதல்கட்டமாக ஆயிரம் மாடுகள் வாங்க மானியம் தரவுள்ளோம். பொங்கலையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பொங்கள் பொருட்கள் அங்கன்வாடி மூலம் தரப்படும். இதற்கு ரூ.17.5 கோடி தரப்படும்.

ரேஷன் கடைகளைத் திறந்து பொருட்களை தருவதுதான் அரசின் எண்ணம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நான்கு மாத அரிசி பணம் சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு ரூ.2400-ம், மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கு ரூ.1200ம் பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்கு ரூ.67 கோடி ஒதுக்கியுள்ளோம்.

மாநில அந்தஸ்து பெற வரும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். மத்திய அரசைக் கேட்போம். அனைத்து எம்எல்ஏக்களையும், அமைப்பினரையும், அனைவரையும் டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்திப்போம். தொடர்ந்து போராடி கேட்டுக்கொண்டிருந்தால்தான் கிடைக்கும். சுதந்திரம் உட்பட எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மாநில அரசு எங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்