மதுரை: பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.டி.மணிகண்டன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகரை தரிசிக்க ஆங்கில புத்தாண்டு நாளில் அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கம். முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் தரிசனத்துக்காக 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியதுள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல் 1.1.2023-ல் பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வரும் முதியவர்கள், குழந்தைகளுடன் வருவோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு தனி வழி அமைக்கவும், சிவாச்சாரியர்கள், பக்தர்கள், கோயில் பணியாளர்கள், காவலர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் கொண்ட விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் வழக்கமான அமர்வில் முறையிடுமாறு கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago