சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 29, 30-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில்அடுத்த 48 மணி நேரத்தில் வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
28-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 12 செமீ, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, ஊத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ. மழை பதிவாகி யுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago