விருத்தாசலம்: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமணன், கடந்த சில நாட்களாக கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எலவசனூர்கோட்டையில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்த்தபடி, மொபட்டில் சென்றார்.
வேப்பூரை அடுத்த சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஆட்டு மந்தை மீது மோதியது. இதில் 150 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. லட்சுமணனும் உயிரிழந்தார். விபத்துக்குள்ளான பேருந்தை பின் தொடர்ந்து வந்த அரசு, தனியார் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றன. வேப்பூர் போலீஸார் லட்சுமணன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சாலையில் சிதறிக் கிடந்த செம்மறி ஆடுகளை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்தை அமைச்சர் சி.வெ.கணேசன், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago