பிரதமர் மோடி உதவியால் இலங்கை மீண்டு வருகிறது - செந்தில் தொண்டமான் தகவல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை: இந்திய பிரதமர் மோடியின் உதவியால், இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

சிவகங்கை அருகே மதகுபட்டியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்திய பிரதமர் மோடி செய்த நிதியுதவியால் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக முதல்வரும் உணவுப் பொருட்கள் அனுப்பி உதவினார்.

மற்ற நாடுகள் உதவி செய்யாதபோது இந்தியா உதவிக்கரம் நீட்டியது பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும் இலங்கை நிதி உதவியை எதிர்பார்த்துள்ளது. உதவி கிடைக்கும் பட்சத்தில், ஓரிரண்டு ஆண்டுகளில் இலங்கை பழைய நிலைமையை அடையும்.

எல்லை தாண்டி வரும் மீனவர்களைத்தான் இலங்கை கடற்படை கைது செய்கிறது. மேலும் அவர்களை உடனுக்குடன் விடுவித்து வருகிறது. ஆனால் கடத்தல், சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை சட்டப்படி நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றம் மூலமே தீர்வு காண முடியும் அல்லது 2 நாடுகளின் பேச்சுவார்த்தையில் தீர்வு காணலாம். மீன்பிடி எல்லை பிரச்சினையை தீர்ப்பது, இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்