கோவை: பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே செயல்படும் கடைகள் இரவு முழுவதும் செயல்பட அனுமதிக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் வியாபாரிகள் சம்மேளனத்தினர் மனு அளித்தனர்.
கோவை மாநகர வியாபாரிகள் சம்மேளனத் தலைவர் கே.ஆர்.ராஜா தலைமையில் நிர்வாகிகள் பலர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளை இரவு 10.30 மணிக்கு மூட வேண்டுமென காவல் துறையினர் வற்புறுத்துகின்றனர்.
மீறி கடைகளை நடத்துவோர் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். கடைகள் செயல்படாததால் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வரும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். முன்பு நள்ளிரவு 12 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட இடங்களில் உள்ள கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago