கோவை: அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியில் ரூ.16.90 லட்சம் மதிப்பில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட பம்பிங் ஸ்டேஷனை நேற்று திறந்து வைத்தபிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை.
அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் எல்லாம் முதல்வர் வீட்டில் இருக்கும் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர் தனியாக அழைத்து பேசியுள்ளார். அப்போது, எங்களுக்கு இவ்வளவு கமிஷன் அளித்தால்தான் நீங்கள் மருந்துகள், உபகரணங்களை விநியோகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இருக்கும் மருந்துகளைத்தான் எழுதித்தர வேண்டும். இல்லாத மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என மருத்துவர்களுக்கு அரசு மறைமுக மிரட்டல் விடுக்கிறது. இங்கு 10 துறைகள் மகனுக்கு, 10 துறைகள் மருமகனுக்கு என ஆட்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் குடும்ப ஆதிக்க சக்திகளை முதல்வர் ஒடுக்க வேண்டும்.
மருத்துவத் துறையில் முதல்வரின் மருமகன் கூறித்தான் விநியோகஸ்தர்களை அழைத்துப் பேசுவதாக தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்குக்கூட உயிர் காக்கும் மருந்துகளை அளிக்க முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago