தொடர் மழை, பனியின் தாக்கத்தால் மா பூக்கள் கருகி மகசூல் பாதிக்கும் அபாயம் - வாட்டத்தில் கிருஷ்ணகிரி விவசாயிகள்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் பனியின் தாக்கம் காரணமாக மா மரங்களில் 30 சதவீதம் பூக்கள் கருகி மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக போச்சம்பள்ளி, சந்தூர், காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மா சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுவைமிகு ரகங்கள்: இங்கு அல்போன்ஸா, தோதாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் உள்ளிட்ட சுவை மிகுந்த ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 4 முதல் 5 லட்சம் மெட்ரிக் டன் வரை மா அறுவடை செய்யப்படுகிறது. இவற்றில் 30 சதவீதம் உள்நாடு மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் மாம்பழங்கள் உள்ளூர் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது.

கருகும் பூக்கள்: ஆண்டுதோறும் மா அறுவடை முடிந்த பின்னர் ஜூன் முதல் நவம்பர் வரை (பூக்கள் பூக்கும் பருவம் வரை) மாமரத்துக்கு தேவையான தண்ணீர், பூச்சி மருந்து தெளித்து விவசாயிகள் மாமரங்களை பராமரிப்பது வழக்கம். நிகழாண்டில் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் நிரம்பி உள்ளன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மாமரங்களில வழக்கத்தைவிட பூக்கள் அதிகம் பூத்து குலுங்கியது. ஆனால், தொடர் மழை மற்றும் பனியின் தாக்கம் அதிகரிப்பால் பூக்கள் கருகி மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இழப்பீட்டுக்கு கோரிக்கை; இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக மா மகசூல் கைகொடுக்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் பெய்த கனமழையால், மா மரங்களில் பூக்கள் நன்கு பூத்துள்ள நிலையில், அவ்வப்போது பெய்யும் தொடர் மழை மற்றும் பனியின் தாக்கம் காரணமாக தற்போது, 30 சதவீதத்துக்கும் மேல் பூக்கள் கருகிவிட்டன. இதனால், மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கைவிடும் நிலை: மேலும், நிகழாண்டில் மாவுக்கு உரிய விலை கிடைக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதேநிலை ஒவ்வொரு ஆண்டு நீடித்தால், மா சாகுபடியை கைவிடும் நிலை ஏற்படும். ஆண்டுதோறும் பாதிப்புள்ளாகும் விவசாயிகளுக்கு இழப்பீடு கோரியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவே, மா விவசாயத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்