மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நாட்டிய விழாவில் கிராமிய கலைகள்

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில், இந்திய நாட்டிய விழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் மாலையில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், உள்ளூர் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களின் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலைக் குழுவினர் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கிராமிய நடனங்களை அரங்கேற்றினர்.

இதேபோல், சென்னையைச் சேர்ந்த பரதநாட்டிய குழுவினரின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சுற்றுலா பயணிகள் ஆர்வமாக கண்டு ரசித்தனர். மேலும், நாட்டிய விழாவில் இடம்பெற்ற கிராமியக்கலை நிகழ்ச்சிகள் ரசிக்கத் தக்கதாக இருந்ததாக சுற்றுலாபயணிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்