சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
முக்கியமாகப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதே செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அன்பு (வடக்கு), லோகநாதன் (தலைமையிடம்) மற்றும் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்புப் பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பல்வேறு பிரிவைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் போலீஸார் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வரும் 31-ம் தேதி இரவு 9 மணியிலிருந்து சென்னை தியாகராயநகர், அடையாறு, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை, புனித தோமையர் மலை, பூக்கடை உள்ளிட்ட 12காவல் மாவட்டங்களில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் பணியில் ஈடுபடஉள்ளன. மேலும் தரமணி, அடையாறு, கிண்டி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, சென்னை வெளிவட்ட சாலைமற்றும் ஜிஎஸ்டி ரோடு போன்ற பகுதிகளில் 25 இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு குழுக்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளன.
சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மெரினா, பெசன்ட் நகர் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் ‘ட்ரோன்’ மூலம் போலீஸார் கண்காணிக்க உள்ளனர். இதற்காக 9 ட்ரோன்கள் பயன்படுத்தபடுகின்றன.
இதற்கிடையே டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் போலீஸார், 10 ஆயிரம் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். 31.12.2022 மாலை முதல் வாகன சோதனை தமிழகம் முழுவதும் நடைபெறும்.
எனவே, அன்று இரவு யாரும் தேவையின்றி வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். முதல் நாள் இரவும், புத்தாண்டின்போதும் கடற்கரைகளில் பொது மக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்தெரிவிக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago