கோவையை சேர்ந்தவருக்கு உத்தராகண்ட்டில் தேர்வு மையம்: மாற்றித் தர எம்பி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை அனில்குமார் என்பவருக்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சிவில் ஊழியர் தேர்வுக்கான மையத்தை சென்னையில் கேட்டிருந்தும், 2,500 கி.மீ. தொலைவில் உள்ள உத்தராகண்ட் மாநிலம், கனாசரில் போட்டுள்ளனர்.

தேர்வு மையத்தை மாற்றி தருமாறு டிச.2-ம் தேதியன்று பாதுகாப்புத்துறை நியமன அலுவலருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு டிச.15-ம் தேதியன்று தேர்வு மையங்கள் எல்லாமே மனித தலையீடின்றி கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்துள்ளது. எளிய குடும்பத்தைச் சேர்ந்த தேர்வர்கள், 2,500 கி.மீ. தூரத்தை எத்தனை நாள் பயணித்து, அலைச்சலுடன் செல்வது என்பதை உணர வேண்டும்.

இயந்திரம் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். எனவேதான் மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால், அதற்கு மனிதர்களிடமிருந்தும் இயந்திரத்தனமாகவே பதில் வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்