கடலில் சுனாமி உருவான அடுத்த 20 முதல் 30 நிமிடங்களில் எந்த திசை நோக்கி, எவ்வளவு தூரம் செல்லும் என்பதை துல்லியமாக அறிவிக்க முடியும் என ஐதராபாத் சுனாமி எச்சரிக்கை மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில் இந்திய புவியியல் மற்றும் கடல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ரூ.125 கோடி செலவில் சுனாமி எச்சரிக்கை மையம் நிறுவப்பட்டு கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தினமும் தொடர்ந்து 24 மணிநேரமும் மூத்த விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் விஞ்ஞானிகள் கடலில் ஏற்படும் நிலநடுக்கம், பேரலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அங்கு பணியாற்றி வரும் இளம் விஞ்ஞானிகள் பி.வி.ராஜேஷ், பி.அஜய்குமார் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். இந்தியாவில் ஐதராபாத்தில் சுனாமி எச்சரிக்கை மையம் செயல்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் பிரத்யேக கருவிகள் நிறுவப்பட்டு கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
நாடு முழுவதும் மொத்தம் 17 இடங்களில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 5 முதல் 7 நிமிடங்களில் எங்களுக்கு உடனடியாக தகவல் கிடைத்து விடும். நிலநடுக்கத்தின் அளவு 6.5 ரிக்டர் மேல், கடலில் 100 கி.மீ ஆழத்தில் ஏற்படும் போது சுனாமி பேரலைகளாக வருகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக்கொள்ளும். அலையின் தன்மையை பொருத்தே சுனாமி வருமா என கண்டறிய முடியும்.
சாதாரணமான நிலநடுக்கம் என்றால் அடுத்த சில நிமிடங்களில் உடனடியாக நாங்கள் அறிவித்து விடுவோம். ஆனால், சுனாமி போன்ற பேரலை உருவாகுவதற்கான நிலநடுக்கம் என்றால் எவ்வளவு ஆழத்தில் நடக்கிறது. எங்கிருந்து வருகிறது. எந்த திசைநோக்கி, எவ்வளவு தூரம் செல்லும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு அடுத்த 20 அல்லது 30 நிமிடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில அரசுகளுக்கு அறிவிக்க முடியும்.
உதாரணத்துக்கு அந்தமான் நிக்கோபர் கடல் பகுதியில் சுனாமி பேரலை உருவாக்குவதற்கான நிலநடுக்கம் என்றால் இந்திய கடற்கரை பகுதியை வந்தடைய சுமார் 2.30 மணி முதல் 3 மணிநேரம் ஆகும். ஆனால், பேரலை உருவாகும் அடுத்த சில நிமிடங்களில் இந்த மையத்துக்கு தகவல் கிடைத்தாலும், துல்லியமாக கணக்கிட்டு வெளியிட குறைந்தது 20 நிமிடங்கள் வரை ஆகும்.
இதற்கிடையே, இந்த துறையில் மேலும், தொழில்நுட்பத்தை புகுத்துவது, சுனாமியின் போது பாதுகாப்பாக இருக்கும் முறை, இயற்கை சீற்றம் போன்ற தகவல்களை இன்னும் விரைவாக அளிப்பது போன்றவை குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ), ஐஐடிகளிடமும் தொடர்ந்து நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago