புதுச்சேரி | டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த நிலையில், முறையான சிச்சை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள், கிராம மக்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். கூட்டுறவு வங்கி ஊழியர். இவரது மனைவி செல்வி(36). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 25-ம் தேதி முதல் செல்வி காய்ச்சலால் அவதிபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் செல்விக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை செய்து வந்துள்ளனர். இதனிடையே அவருக்கு ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. இதனால் அவருக்கு ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவில்லை எனவும், மூத்த மருத்துவர்கள் யாரும் செல்வியை பரிசோதனை செய்யாமல் பயிற்சி மருத்துவர்களும், மருத்துவ கல்லூரி மாணவர்களுமே சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையின் மருத்துவ முறையில் திருப்தி ஏற்படாத செல்வியின் குடும்பத்தினர் செல்வியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டிஸ்சார்ஜ் செய்ய கேட்டுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் செல்வி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து அறிந்த வந்த உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனை முன்பு கூடினர். தொடர்ந்து கடலூர்-புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கிருமாம்பாக்கம் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவமனை நிர்வாகம் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கூறி செல்வியின் உடலை வாங்க மறுத்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்துடன் சமாதானம் பேச ஏற்பாடு செய்வதாக போலீஸார் உறுதி அளித்தனர். அதனையேற்ற அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இருப்பினும் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கிராம மக்கள் மாலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மெயின்கேட்டை இழுத்து மூடி பூட்டுபோட்டனர். தொடர்ந்து மருத்துவமனை முன்பு சவபெட்டியுடன் மேளம் அடித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இரவும் நீடித்த நிலையில் தொடர்ந்து போலீஸார், கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்