பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைகள் | தாமதமானாலும் தரமானதாக வழங்கப்படும்: அமைச்சர் காந்தி

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: "பொங்கல் பண்டிகையையொட்டி, வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது சற்று தாமதமானாலும் தரமானதாக வழங்கப்படும்" என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி.அணை திறப்பு விழாவில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி புதன்கிழமை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பொங்கல் பண்டிகைக்ககு இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது சற்று தாமதமானலும்கூட, தரமானதாகவும், புதிய டிசைன்களிலும் வழங்கப்படும். இதுவரை வழங்கப்பட்டதற்கும், தற்போது வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகளுக்கும் நிறைய வித்தியாசங்களைக் காணலாம்.

15 வகையான டிசைன்களை சேலைகளில் மாற்றியுள்ளோம். 5 டிசைன்களில் வேட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை இலவச வேட்டி, சேலைகள் சிறப்பானதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்