சென்னை: புரசைவாக்கத்தில் உள்ள தானா தெருவை சீரமைக்க வேண்டும் என்று ‘இந்து தமிழ் திசை’ செய்தியை சுட்டிக்காட்டி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் 78-வது வார்டு உறுப்பினர் சோ.வேலு கோரிக்கை வைத்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (டிச.28) நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தில் பேசிய 78-வது வார்டு உறுப்பினரும், நியமனக் குழு உறுப்பினமருமான சோ.வேலு, "சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மரணம் அடைந்தால் மான்மறத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இனிவரும் காலங்களில் மாநகராட்சி ஊழியர்கள் யார் மரணம் அடைந்தாலும் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அம்மா உணவகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகிறது. பல்லாயிரம் ரூபாய் மாதம் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து புரசைவாக்கத்தில் உள்ள தானா தெரு தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசுகையில், "இந்து தமிழ் திசை இணையதளத்தில் திணறும் தானா தெரு என்ற தலைப்பில் அக்டோபர் மாதம் செய்தி வெளியாகி உள்ளது. தானா தெரு மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அமைச்சரும் அந்த வழியாகத்தான் சென்று வருகிறார். எனவே, இந்த சாலையை ஓழுங்குப்படுத்த வேண்டும்" அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago