போதைப்பொருட்கள் பயன்படுத்துவோரை குற்றவாளிகளாக பார்க்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம் 

By செய்திப்பிரிவு

சிவகங்கை: "போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களை குற்றவாளிகளைப் போல் பார்க்கக் கூடாது. அவர்களை நோயாளிகளாக பார்க்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், காங்கிரஸ் எம்பி, கார்த்தி சிதம்பரம் இன்று (டிச.28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "போதைப்பொருட்கள் தொடர்பான பிரச்சினைகளை இரண்டு விதமாக பிரித்துப் பார்க்க வேண்டும். போதைப் பொருட்களை சாதாரணமாக பயன்படுத்துபவர்கள், அதை விநியோகம் செய்பவர்கள்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் என்றால், அவற்றை விநியோகம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், போதைப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், இறக்குமதி செய்பவர்கள், அதை விற்பனை செய்கின்ற மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பு இருக்கிறது. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும். இந்தியாவில் இதுபோன்ற மறு வாழ்வு மையங்கள் அதிகம் கிடையாது. அதேபோல், கவுன்சிலிங் கொடுப்பதற்கும் ஆட்கள் கிடையாது. போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களை குற்றவாளிகளைப் போல் பார்க்கக் கூடாது. அவர்களை நோயாளிகளாக பார்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்