தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதனைஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 28-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில்இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

27-ம் தேதி காலை 8.30 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 9 செ.மீ., மாஞ்சோலையில் 7 செ.மீ., வேர்வலர் அணையில் 6 செ.மீ., நாலு முக்குவில் 5 செ.மீ., தூத்துக்குடி, திருப்பூரில்தலா 4 செ.மீ., தென்காசி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், செங்கோட்டையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுவரை 1 சதவீதம் அதிகம்: தமிழகத்தில் அக்.1 முதல் டிச.27 வரை பதிவாகும் சராசரி மழை அளவு 437.5 மி.மீ. ஆனால்,தற்போது வரை 441.2 சதவீதம் மழை பெய்துள்ளது. இது, சராசரியை விட 1 சதவீதம் அதிகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்