சென்னை: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் பணி நியமனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளையும் தமிழிலும் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதிசெய்ய முடியும். அதோடு அனைத்து பகுதியினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும். மேலும், மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் சேருவதற்கான அவர்களின் விருப்பமும் நிறைவேறும்.
நல்ல நிர்வாகத்துக்கு பொது மக்களுடன் இணக்கமாக பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாசாரத்தில் பரிச்சயம் போன்றவை மிகவும் அவசியம். தமிழகம், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவு மற்றும் திறமையுடன் கூடிய மனிதவளங்களை கொண்டுள்ளதால், அவற்றை நன்கு பயன்படுத்த முடியும்.
மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு மாணவர் நலச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில், 4.5 சதவீதம் அளவில் மட்டுமே தென் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த 2021-2022-ம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்எஸ்சி) ஆண்டு அறிக்கை தெள்ளத் தெளிவாக கூறுகிறது.
» வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் | துண்டு பிரசுரம் இல்லை.. அன்பளிப்புகள் இல்லை..!
» மின்வாரியத்தின் நிதிச் சுமையை குறைக்க 20,000 மெ.வா சூரிய மின்சக்தி: உற்பத்திக்கான பணிகள் தொடக்கம்
தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் தட்டச்சர், எழுத்தர், சரக்கு வண்டி காப்பாளர், இளநிலை கணக்கு உதவியாளர், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்லர். இது வேலை தேடும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டும்.
இச்சூழ்நிலையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழிலும் நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ரயில்வே நிறுவனங்களில் அப்ரண்டீஸ் பயிற்சி பெறுவோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேற்கண்ட விஷயங்களை எல்லாம் கருத்தில்கொண்டு தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் மத்திய அரசு பணி வாய்ப்புகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago