திருச்சி: திருச்சியில் நாளை (டிச.29) நடைபெறும் அரசு விழாவில் 22,716 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், 5,639 திட்டங்களை திறந்து வைத்து 5,951 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள டிஎன்பிஎல் ஆலை, மணிகண்டம் அருகேயுள்ள சன்னாசிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச.29) திருச்சிக்கு வர உள்ளார்.
இதையொட்டி 3 இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். அண்ணா விளையாட்டரங்கில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.655 கோடி மதிப்பிலான 5,639 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.308 கோடி மதிப்பிலான 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.79 கோடி மதிப்பில் ரூ.22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
» வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் | துண்டு பிரசுரம் இல்லை.. அன்பளிப்புகள் இல்லை..!
» மின்வாரியத்தின் நிதிச் சுமையை குறைக்க 20,000 மெ.வா சூரிய மின்சக்தி: உற்பத்திக்கான பணிகள் தொடக்கம்
மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்களை வழங்கி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பேச உள்ளார். விழாவில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பயனாளி இல்லத்துக்கு செல்கிறார்: அதைத்தொடர்ந்து, மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் தொழிற்சாலையில் ரூ.1,350 கோடியில் கட்டப்பட்டுள்ள 2-ம் அலகு மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவைத் திறந்து வைக்கிறார். அதன்பின், அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் மணிகண்டம் அருகே உள்ள சன்னாசிப்பட்டிக்கு வரும் முதல்வர், அங்கு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வரும் பயனாளி ஒருவரை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து நலம்விசாரிக்கிறார்.
பின்னர் அதே கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து விமானநிலையம் வந்து, சென்னைக்குப் புறப்படுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் செல்லக்கூடிய வழித்தடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், எஸ்.பி சுஜித்குமார், எம்எல்ஏ சவுந்தர பாண்டியன், மாநகராட்சி பொறியாளர் (பொ) சிவபாதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago