சென்னை: சென்னையில் கடந்த 11 மாதங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளின் விவரத்தை சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
சாலை விபத்துகளை குறைக்கவும், விபத்து மரணங்களை முற்றிலும் தடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்தாதவர்களை, அபராதம் செலுத்த வலியுறுத்தி சென்னையில் 12 கால்சென்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டன.
தொடக்கத்தில் அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸார் நேரடியாக பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு அந்தமுறை மாற்றப்பட்டது. கையடக்க கருவி மூலம் இ-செலான் வழங்கி, அபராதத் தொகையை வங்கி, இ-சேவை மையம், தபால் நிலையம், நீதிமன்றங்களில் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது.
சாலை சந்திப்புகளில் நின்று கையடக்க கருவி மூலம் அபராதம் வசூலித்து வந்த போக்குவரத்து போலீஸார் தற்போது கண்காணிப்பு கேமராக்களை அமைத்து அதில், பதிவாகும் காட்சிகள் மூலம் விதி மீறல் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அபராதம் வசூலிக்கின்றனர். இதற்காக சென்னையில் பூக்கடை, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணா நகர், அடையாறு உட்பட 11 இடங்களில் 15 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
» ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிரம்பி வழியும் கிணறுகள் - உபரி நீரால் சாலையில் ஓடும் வெள்ளம்
» புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தடை
தானியங்கி கேமரா: இதில், பதிவாகும் காட்சிகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இதுமட்டும் அல்லாமல் அண்ணா நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விதிமீறல் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து அதிநவீன கேமராவே விதிமீறல் அபராத ரசீதை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் செல்போனுக்கு அனுப்பிவிடும்.
அதன்படி சென்னையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை போக்குவரத்து போலீஸார் பயன்படுத்தும் கையடக்க கருவி, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து அபராதம் விதித்தல், தானியங்கி கேமராவே அபராதம் விதித்தது என கடந்த 11 மாதங்களில் சென்னையில் பதியப்பட்ட விதிமீறல் வழக்கு விவரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் கடந்த 11 மாதங்களில் ஸ்டாப் லைன் மீறலில் ஈடுபட்டதாக 2 லட்சத்து69,337 வழக்குகள், சிக்னல் விதிமீறல் 5 லட்சத்து 79,359, ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 13 லட்சத்து 27,704, எதிர் திசையில் செல்லுதல் 3 லட்சத்து 80 ஆயிரத்து 8, விதிமுறைகளை மீறிய நம்பர் பிளேட் 1 லட்சத்து 34,525, இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்ததாக 33 ஆயிரத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago