திண்டுக்கல்: சின்னாளபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திமுகவினர். இருப்பினும் மோதல்போக்கு காரணமாக பேரூராட்சித் தலைவரைக் கண்டித்து திமுக கவுன்சிலர்களே அலுவலக வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பேரூராட்சித் தலைவராக பிரதீபா தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 9 கூட்டங்கள் நடந் துள்ளன. தொடக்கம் முதலே தலைவருக்கும், கவுன்சிலர்க ளுக்கும் ஒத்துப்போகாமல், மோதல் போக்கு தொடர்கிறது. 18 கவுன்சிலர்களில் 7 பேர் ஆதர வாகவும், 11 பேர் எதிர்ப்பாகவும் உள்ளனர்.
இந்நிலையில் சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் நேற்று தலைவர் பிரதீபா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். முற்பகல் 11.30 மணி வரை கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் வராததால் கோரம் இல்லை எனக் கூறி தலைவர் கூட்டத்தை ஒத்திவைத்தார். அதன் பிறகு வந்த கவுன்சிலர்கள் கூட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்து அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைவர் பிரதீபா எங்களை மதிப்பதில்லை. அவரது கணவரின் தலையீடு அதிகரித்து வருகிறது. பேரூராட்சித் தலைவர் பிரதீபாவா? அவரது கணவரா? எனக் கேள்வி எழுப்பினர். பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு தொடர்ந்தால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வோம் என்றனர்.
» வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் | துண்டு பிரசுரம் இல்லை.. அன்பளிப்புகள் இல்லை..!
» மின்வாரியத்தின் நிதிச் சுமையை குறைக்க 20,000 மெ.வா சூரிய மின்சக்தி: உற்பத்திக்கான பணிகள் தொடக்கம்
தகவல் அறிந்து வந்த திமுக நிர்வாகிகள் கவுன்சிலர்களின் போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பிரதீபா கூறுகையில், கவுன்சிலர்கள் எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் எனத் தெரியவில்லை. அனைத்து கூட்டங்களிலும் பிரச்சினையை எழுப்பி வருகின்றனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago