தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு புதுச்சேரி மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு (டிச 6 முதல் 8 வரை) துக்கம் அனுசரிக்கப்படும். அனைத்து கல்வி, கல்லூரி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி புதுச்சேரியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் புதுவை நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.லாரிகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
குறிப்பாக முக்கிய கடைவீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, பெரிய மார்க்கெட், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, லாஸ்பேட்டை, வில்லியனூர் பகுதிகளில் இருந்த மார்க்கெட்டுகள், பாகூர், திருக்கனூர், காலாப்பட்டு என புறநகர்ப்பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
முதல்வர் ஜெயலலிலா மறவையொட்டி, புதுச்சேரி நகரில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் பஸ்கள் ஓடாததால் பயணிகள் நடமாட்டம் இல்லாத நிலை இருந்தது.
வாகனப் போக்குவரத்தும் மிகக் குறைவாக இருந்ததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா படங்களை வைத்து அதிமுகவினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை பல்கலைக்கு விடுமுறை
முதல்வர் ஜெயலலிதா மறைவை முன்னிட்டு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும், புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்தது.
சட்டப்பேரவை வளாகத்தில் அஞ்சலி
புதுச்சேரியில் இன்று காலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநிலத்தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.அதைததொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலகண்ணன், அரசு கொறடா அனந்தராமன் மற்றும் எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மூன்று நாள் துக்கம்
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,''தன்னிகரில்லா தலைவியான முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். பல்துறை அறிவு, பன்மொழி புலமை, உறுதியான நிலைப்பாடு ஆளுமைத் திறன் போன்றவைகளை தனக்கே உரிய தனித்தன்மையாக வாய்க்கப்பெற்றவர். அவரது இழப்பு அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. தமிழக முதல்வரை நட்புமுறையிலும் அரசியல்மற்றும் அரசு ரீதியாகவும் பலமுறை சந்தித்த நிகழ்வுகள் பசுமையாக என் மனதில் பதிந்துள்ளன. அவரது மறைவு விவரிக்க முடியாத வருத்தத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு புதுச்சேரி மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு (டிச 6 முதல் 8 வரை) துக்கம் அனுசரிக்கப்படும். இன்று அனைத்து கல்வி, கல்லூரி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உறுதியான மனம் வலுவான கட்சி பின்வாங்காத கொள்கை தெளிவான முடிவுகள், பாசமிகு தொண்டர்கள் கொண்ட தமிழகத்தின் சிறந்த தலைவர்களில் ஒருவராக நிகழ்ந்த அதிமுக பொதுச்செயலர் முதல்வர் ஜெயலலிதா மறைவு, தமிழக மக்களுக்கும் அவர் கட்சி தொண்டர்களுக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்'' என்று நாராயணசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago