தென்காசி/ திருநெல்வேலி: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நேற்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பதிவானது. இவ்விரு மாவட்டங்களிலும் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து மலைப்பகுதியில் 85 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
மாஞ்சோலையில் 75, காக்காச்சியில் 60, சேர்வலாறில் 58, பாபநாசத்தில் 47, நாலுமுக்கில் 45, ராமநதி அணையில் 39.20, தென்காசி மற்றும் கடனாநதி அணையில் தலா 30, அம்பாசமுத்திரத்தில்- 28, ஆய்க்குடியில் 27, செங்கோட்டை யில் 24.80, கன்னடியன்கால்வாயில்- 24, கருப்பாநதி அணையில் 23.50, குண்டாறு அணையில் 22.40, களக்காட்டில்- 14.20, சிவகிரியில் 14, மணிமுத்தாறில்- 10.60, சேரன்மகாதேவியில் 10.20, மூலக் கரைப்பட்டியில் 10, நாங்குநேரியில்- 8, பாளையங்கோட்டையில்- 6, திருநெல்வேலியில்- 5.20, சங்கரன்கோவிலில் 5, அடவிநயினார் அணையில் 2.
நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம், பாவூர் சத்திரம், தென்காசி, குற்றாலம், சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், அச்சன்புதூர், வாசுதேவநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவியில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.
» வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் | துண்டு பிரசுரம் இல்லை.. அன்பளிப்புகள் இல்லை..!
» மின்வாரியத்தின் நிதிச் சுமையை குறைக்க 20,000 மெ.வா சூரிய மின்சக்தி: உற்பத்திக்கான பணிகள் தொடக்கம்
திருநெல்வேலி மாநகரில் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் போதிய மழை திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்யாத நிலையில் மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வயல்கள் தரிசாக கிடக்கின்றன. பாசனக் குளங்கள் அனைத்தும் நீரின்றி வறண்டுள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாபநாசத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 115 மி.மீ. மழை கொட்டியது. இதுபோல் ராதாபுரத்தில் 11.20 மி.மீ., திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தலா 11 மி.மீ., மணிமுத்தாறில் 6.20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago