புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவில், "உலக நாடுகளில் புதிய வகை கரோனா (கோவிட்- 19 ஓமைக்ரான் பிஎஃப் 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.
மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும். எதிர்வரும் புதுவருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 அன்று நள்ளிரவு 01.00 மணிக்கு
மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள்/ஹோட்டல்கள்/பார்கள்/ மதுபான கடைகள்/ விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்பு உரிய நடைமுறைகளை (SOP) பின்பற்றி தங்களில் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கபடுகிறது.
மேலும், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நடைமுறைகளின் (SOP) படி செயல்பட வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும்போது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்ய வேண்டும்.
» ''கடனை திரும்ப செலுத்தவில்லை'' - கடலூர் எம்பி-யின் ரூ.45 கோடி சொத்தை வங்கி கையகப்படுத்தியது
» தமிழகத்தில் இதுவரை 1.49 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி
அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கரோனா தடுப்புக்குரிய நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி செயல்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago