விருத்தாசலம்: கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் பண்ருட்டியில் இருந்த ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்களை தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கி நேற்று கையகப்படுத்தியது.
கடலூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், முந்திரி உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுபதி செய்வதோடு, சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், பண்ருட்டி சென்னை சாலையில், வஉசி நகரில் காயத்ரி கேஷ்யூஸ் இன்டஸ்டரீ என்ற பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கிக் கிளையில் கடந்த 10 வருடங்களுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை முறையாக திரும்ப செலுத்தாததால், அவரது வங்கி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அளித்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வங்கி நிர்வாகம் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர் வங்கிக்கு ஆதராக நீதிமன்ற ஆணை பிறப்பித்த நிலையில், வங்கி நிர்வாகம் அந்த இடத்தை ஏலம் மூலம் கடலூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில் ஏலத்தில் எடுத்த நபருக்கு அந்த இடத்தை ஒப்படைக்கும் வகையில் வங்கி நிர்வாகம் நேற்று, வஉசி நகரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து, கம்பி வேலி அமைத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் பெற எம்பி ரமேஷை தொடர்புகொண்ட போது, அவர் பேச முன்வரவில்லை.
கொலை வழக்கில் தொடர்புடையவர்: கடலூர் மக்களவை திமுக எம்.பி.யான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி. அவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிவந்த, மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில். கோவிந்தராசு குடும்பத்தினர் கொலை வழக்காக மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டிருந்த ரமேஷ், கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago