கரோனா சிகிச்சை வசதிகள் | 24 மணி நேரத்தில் அறிக்கை; அரசு மருத்துவமனைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனா சிகிகிச்சை வசதிகள் தொடர்பாக 24 மணி நேரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அவசர கால ஒத்திகை (Mock Drill) இன்று (டிச.27) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்,"கரோனா தொற்று சிகிக்சை தொடர்பான மாதிரி பயிற்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த மாதிரி பயிற்சியில் தற்போது உள்ள அனைத்து கட்டமைப்புகளும் சரிபார்க்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி, தீவிர சிகிச்சை பிரிவு, மருந்து மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட வசதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றை எதிர்கொள்வது தொடர்பாக நடைமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது. பொறுப்பு அதிகாரிகள் 12 மணி நேரம் தங்களுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் படுக்கை வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது மருந்தகம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கையிருப்பு உள்ள மருந்துகளின் அளவு ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதை உறுதிப்படுத்தி 24 மணி நேரத்தில் இந்த வசதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான அலுவலர்கள் கரோனா கேர் மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை 2 நாட்களுக்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரத்திலும், தனியார் மருத்துவமனைகள் 48 மணி நேரத்திலும் அறிக்கையை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்