இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவு வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து 18 ஆயிரம் பேர் அடுத்த கட்ட உடல் தகுதித் தேர்வுக்காக அழைக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் என 3 ஆயிரத்து 552பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர்மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 295 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 99,820 பேர் எழுதினர். 66,908 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், அந்த தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பாகத் தேர்வுவாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ``இந்ததேர்வில் மொத்தம் ஒரு லட்சத்து 98,226 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உடல் தகுதித் தேர்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தின் அடிப்படையில் கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 18,671 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டத் தேர்வில்கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE