கல்வெட்டில் விடுபட்ட கே.என்.நேரு பெயர் - பொறியாளர் உட்பட 2 பேர் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

திருச்சி: மணப்பாறை நகராட்சியில் கால்நடை சந்தைக்கு அருகே 5-வது வார்டில் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த 19-ம் தேதி திறந்து வைத்தார். இதற்காக நகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், அந்தத் துறையின் அமைச்சரான கே.என்.நேருவின் பெயர் இடம்பெறவில்லை.

இந்த விவகாரம் அப்பகுதி திமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து அங்கிருந்த கல்வெட்டு உடனடியாக அகற்றப்பட்டதுடன், பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் நாகப்பட்டினத்துக்கும், நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் ராஜேஷ் திருத்துறைப்பூண்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மணப்பாறை நகரப் பகுதி, திமுகவில் தெற்கு மாவட்டத்தில் உள்ளது. அதன் மாவட்டச் செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்