கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களில் 5 பேரிடம் கோவையில் 2-வது நாளாக விசாரணை

By செய்திப்பிரிவு

கோவை: கோவை கோட்டைமேட்டில் கடந்த அக்.23-ல் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின்(23) உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28), முகமது தவுபீக்(25), பெரோஸ்கான்(28), உமர் பாரூக்(39) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ் கான் ஆகிய 5 பேரை, 9 நாள் காவலில் கடந்த 20-ம் தேதி எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப ரீதியில் ஆதாரங்களை திரட்டவும், அவர்களிடம் கூடுதல் தகவல்களை பெறவும் மேற்கண்ட 5 பேரையும் நேற்று முன்தினம் கோவைக்கு அழைத்து வந்தனர். உக்கடம், ஜி.எம்.நகர், அல்அமீன் காலனி, கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் சதித்திட்டம் தீட்டிய இடங்களை நேரில் காட்டி விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இந்த விசாரணை நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்தது. நேற்று காலை உக்கடம், ஜி.எம்.நகர், அன்பு நகர், புல்லுக்காடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தெரிவித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்