சென்னையில் 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: உயிரிழந்தோருக்கு அரசியல் தலைவர்கள், மீனவ அமைப்புகள் மரியாதை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 18-ம் ஆண்டு சுனாமிநினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி மெரினா மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அரசியல் கட்சிகள், மீனவஅமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிச.26-ம்தேதி சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர். சென்னை கடலோரப் பகுதிகளிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், ஒவ்வோர்ஆண்டும் டிச.26-ம் தேதி சுனாமிநினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திமுக சார்பில் திருவொற்றியூர் கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் தலைமை தாங்கி மீனவர்களோடு சேர்ந்து பால் ஊற்றியும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். அதேபோல மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து பட்டினப்பாக்கம் கடற்கரையில் பால் ஊற்றியும், மலர்கள் தூவியும்மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வந்த கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுமக்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார்.

சுனாமியால் உயிரிழந்தோருக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் மீன்வளத் துறைஅமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று, மீன்பிடி படகில் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். கடற்கரையில், உயிரிழந்தோர் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மரியாதை செலுத்தினார்.

மெரினா கடற்கரையில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய பெண்கள்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை கலங்கரை விளக்கம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதியில் மாநில மீனவரணி செயலாளர்ஜெ.கோசுமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள்எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் பங்கேற்று சுனாமியால் உயிரிழந்தோரின் உருவப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகமாவட்டச் செயலாளர்கள் பி.வைரமுத்து, கே.கிருஷ்ணன்,ரெட்சன் அம்பிகாபதி, சைதை எம்.எம்.பாபு, மாநில மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி. அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் குரு மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாஜக மீனவர் அணி மாநிலச் செயலாளர் சதிஷ்குமார் தலைமையில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மேலிடஇணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதைசெலுத்தினர். தொடர்ந்து, விவேகானந்தர் இல்லம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுனாமியால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு சுதாகர் ரெட்டிநலத்திட்ட உதவி வழங்கினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நலச் சங்கம், காமராஜர் கட்டுமரமீனவர் கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மீனவர் சங்கங்கள் காசிமேட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி, உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தினர்.

சுனாமியால் தங்கள் குடும்பத்தினரை இழந்த மீனவர்கள் தங்கள்குடும்பத்துடன் வந்து கண்ணீர் விட்டு, கதறி அழுதவாறு காசிமேடு, மெரினா, பெசன்ட் நகர் ஆகிய கடலோரப் பகுதிகளில் மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்