சென்னை: விமானநிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்துக்கு நிதித்துறை விரைவாக ஒப்புதல் கொடுத்து, பணியை தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீதொலைவில் நீட்டிப்பு செய்யதிட்டமிடப்பட்டது. இப்பாதை மற்றும் 12 நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.4,528 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழித்தடத்தில் பல்லாவரம்,கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர்,திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய 12 மெட்ரோ நிலையங்கள் உயர்மட்ட பாதையில் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டம்தொடர்பாக தமிழக அரசிடம்இருந்து எந்தவித ஒப்புதலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தாம்பரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: விமான நிலையம்-தாம்பரம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம் வெறும் வடிவமைத்தல் நிலையிலேயே உள்ளது. இதன் விரிவான திட்ட அறிக்கையில் சில திருத்தம் செய்து தமிழக நிதித்துறைக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பியுள்ளது. ஆனால், அவர்களிடம்இருந்து தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுவரை அனுப்பி வைக்கவில்லை. இத்திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் கொடுத்து, பணியை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago