வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்: எஸ்ஐ, காவலர் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ மற்றும் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸார் உரிய ஆவணங்கள் இருந்தாலும் வாகன ஓட்டிகளிடம் கட்டாய பண வசூலில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தினம்தோறும் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளிடம் கோயம்பேடு போக்குவரத்து எஸ்.ஐ ஜெயக்குமார் மற்றும் போக்குவரத்து காவலர் மணிகண்டன் ஆகியோர் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான இரு போலீஸாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்