நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரை: 2,260 கோடி நோட்டுகளை விடுவித்தது ரிசர்வ் வங்கி

By குள.சண்முகசுந்தரம்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்ட நாளில் இருந்து டிசம்பர் 19-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 2,260 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டு களை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது.

கறுப்பு பண புழக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக 500 மற்ரும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதையடுத்து, செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ள டிசம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் முடிவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், நவம்பர் 10-ம் தேதியில் இருந்து இதுவரையில் சுமார் 14.5 லட்சம் கோடிக்கான செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் மையங்கள்

அதேசமயம், நவம்பர் 10 முதல் டிசம்பர் 19-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கி கவுன்டர்கள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் மூலமாக ரூ. 5,92,613 கோடியானது பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் ரிசர்வ் வங்கியானது 2,260 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டு களை வங்கிகளுக்கு வழங்கி இருக்கிறது.

இதில் 10, 20, 50, மற்றும் 100 ரூபாய் ஆகிய குறைந்த முகமதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2,040 கோடிகள். 2,000 மற்றும் 500 ரூபாய் ஆகிய அதிக முகமதிப்பு கொண்ட நோட்டுகளின் எண்ணிக்கையானது 220 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்