கரூர்: கரூரின் திருமாநிலையூரில் வைக்கப்பட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பற்றிய சர்ச்சைக்குரிய பதாகை அகற்றப்பட்டது.
கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்தவர் டி.எம்.செல்வேந்திரன் (23). கரூர் மேற்கு மாநகர மாணவரணியைச் சேர்ந்தவர் இவர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பில்லை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட கோரிய நிலையில், டி.எம்.செல்வேந்திரன் தனது வீட்டின் முன்பு முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, துணை மேயர் சரவணன், மண்டலக் குழுத் தலைவர் எஸ்.பி.கனகராஜ் உள்ளிட்டோர் படங்களுடன், ரஃபேல் வாட்சில் நடிகர் வடிவேல் பாடிசோடா வேடத்தில் உள்ள படம் மற்றும் ஆடு படத்தையும் அச்சிட்டு, (போக்கிரி படத்தில் வடிவேலு தம்பி டீ இன்னும் வரல எனக் கூறுவதுப் போல) ‘தம்பி மல! பில்லு இன்னும் வரல..?’ என விமரிசித்து பதாகை ஒன்றை வைத்திருந்தார்.
இது தொடர்பான செய்தி, படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து திமுகவினர், அவரை கண்டித்து அந்தப் பதாகையை அகற்ற அறிவுறுத்தினர். மேலும், சர்ச்சைக்குரிய பதாகை குறித்து பாஜகவினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பசுபதிபாளையம் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பதாகை அகற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago