நெடிய பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர் - இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று (டிச.26) தனது 98 வது பிறந்தநாளை எட்டியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்; 'தகைசால் தமிழர்' தோழர் நல்லகண்ணுவிற்கு 98-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.

தொண்டுக்கு இலக்கணம்! தியாகத்தின் இலக்கியம்! கொள்கையின் மரு உரு! உழைப்பின் திரு உரு! அய்யா நல்லகண்ணு இன்றைய தமிழ்நாட்டின் ஈடு இணையில்லா வழிகாட்டி! நீடூழி வாழ்ந்து இந்த நாட்டுக்கு வழிகாட்ட வாழ்த்துகிறேன்!" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்