திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று பகல் பத்து 3-ம் நாள் உற்சவத்தில் சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 3-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காதுகாப்பு, ரத்தின கிளி, ரத்தின அபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத மாலை, முத்து மாலை, அடுக்குப்பதக்கம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, காலை 7.30 மணிக்கு அர்ச்சுன (பகல் பத்து) மண்டபத்தை சேர்ந்தார்.
அங்கு காலை 7.45 மணிக்கு அரையர் சேவை நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல், மாலை 4 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் சேவை ஆகியவை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago