ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: சேலத்தில் சாரல் மழை

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் நேற்று மதியம் திடீரென குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்த நிலையில் மாலையில் கனமழையாக அதிகரித்தது.

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடும் குளிரும், பனிப் பொழிவுமாக இருந்தது. நேற்று சாரல் மழையும் பெய்தது.பனியுடன் மழையும் இணைந்ததால், சுற்றுலாப் பயணிகள் வெளியிடங் களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

பகலிலும் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன. ஏற்காடு நகரப் பகுதி, செம்ம நத்தம், நாகலூர், மஞ்சக்குட்டை, படகு இல்லம், சேர்வராயன் கோயில், பகோடா பாயின்ட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலத்தில் நேற்று மதியம் திடீரென கார்மேகம் சூழ குளிர்ந்த காற்றுடன், சாரல் மழை பெய்தது. மாலையில் இடியுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்