துறையூர் முருங்கப்பட்டியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சிபிசிஐடி விசாரணை: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

By அ.வேலுச்சாமி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக் கான காரணம் குறித்து சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணையைத் தொடங்கினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முருங்கப்பட்டியில் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் வெடிமருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள ஒரு அலகில், நேற்று முன்தினம் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் தரைமட்டமானதுடன், அங்கு பணியாற்றிய பலர் இடிபாட் டில் சிக்கியும், உடல் சிதறியும் பலியாகினர்.

தகவலறிந்த அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் அங்குசென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். அப்போது, அங்கிருந்து ஏராளமான நபர் களின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக மீட்கப்பட்டன. பலியான வர்களில் ஒருவரின் உடல்கூட முழுமையாகக் கிடைக்கவில்லை.

நேற்று முன்தினம் இரவு வரை 18 பேர் இறந்ததாக மாவட்ட நிர் வாகம் அறிவித்தது. இதுதவிர, மெஷின் ஆபரேட்டர்கள் வடி வேலன்(33), விஜயகாந்த்(32), சங்கர்(45), ஸ்டோர் சூபர்வைசர் கார்த்திகேயன்(33) மற்றும் தூய்மைப் பணியாளர்கள், பாக்கிங் தொழிலாளர்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திருச்சி, துறையூர், தம்மம்பட்டி யில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு பணியாற் றிய சேலம் மாவட்டம் கெங்க வல்லியை அடுத்துள்ள செந்தாரப் பட்டியைச் சேர்ந்த பிரவீண் குமார்(25) குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது பெயரும் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் இறந்தவர்களின் எண் ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெடி விபத்து குறித்து வெடிபொருள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான விஜயக்கண் ணன், மேலாளர்கள் பிரகாசம், ராஜகோபால், பாதுகாப்புப் பிரிவு மேலாளர் ஆனந்தன் உட்பட 4 பேர் மீது 304(2), இந்திய வெடிபொருள் சட்டம் 9 (1)ஏ, 9 (பி)(1)(ஏ), வெடிபொருள் சட்டம் 3, 4(பி), 5 ஆகிய பிரிவுகளில் உப்பிலியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கு குறித்த ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து, சிபிசிஐடி டிஐஜி வித்யா குல்கர்னி, எஸ்பி ராஜேஸ் வரி மற்றும் போலீஸார் நேற்று காலை முருங்கப்பட்டிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட எஸ்பி செந்தில்குமாரும் அவர்களுடன் இருந்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆய்வு, மாலை 5 மணி வரை நீடித்தது. செய்தியாளர்கள், பொதுமக்கள் என யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

விபத்துக்கு காரணம் என்ன?

முருங்கப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஆய்வு குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது, “உள்ளூர் போலீஸாரிடம் இருந்து வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெடிபொருட்களின் திறன், கையாளப்படும் மூலப்பொருட்கள், அவற்றுக்கான பாதுகாப்பு முறைகள், தற்போது ஏற்பட்டுள்ள விபத்துக்கான காரணம் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயந்திர பராமரிப்பில் ஏற்பட்ட பழுதால் விபத்து ஏற்பட்டதா அல்லது மனித தவறால் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனை

முருங்கப்பட்டியில் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் மட்டுமின்றி, சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை தொழி லாளர்களின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன. அவற்றைச் சேகரிக்கும் பணி 2-வது நாளாக நேற்றும் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் சுந்தரராஜ் கூறும்போது, “இறந்தவர்களின் உடல்கள் முழுமை யாகக் கிடைத்தால், அந்த இடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக திருச்சி, ரங்கம், முசிறி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சம்பவ இடத்தில் தயாராக இருந்தனர். ஆனால், ஒரு உடல்கூட முழுமையாகக் கிடைக்கவில்லை.

சிறு, சிறு துண்டுகளாகக் கிடைத்த பாகங்கள் அனைத்தும், மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, உடல் பாகங்கள் அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதுகுறித்த ஆய்வறிக்கை காவல் துறையினரிடம் அளிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்