ஓசூர்: கெலமங்கலம் அருகே 18 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய ஏரியில் கிராம மக்கள் தெப்பம் விட்டு நேற்று வழிபட்டனர்.
கெலமங்கலம் அருகே தர்ம ராஜா கொத்தப்பள்ளி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் கடந்த 18 ஆண்டுகளாக ஏரி நிரம்ப வில்லை. இந்நிலையில், நிகழாண்டில் பெய்த தொடர் கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, தர்மராஜா கொத்தப்பள்ளி, பென்னிக்கல், உப்பரதம்மண்டரப்பள்ளி, பைரமங்கலம், சின்னட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஒன்றிணைந்து கங்கம்மா தேவிக்கு நேற்று சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் கங்கமா தேவிக்கு பூ அலங்காரம் செய்து, மேள, தாளங்கள் முழங்க மாவிளக்குடன் ஊர்வலமாக ஏரிக்கு சென்றனர்.
பின்னர் ஏரியில் அமைக்கப் பட்டிருந்த தெப்பத்தில் கங்கம்மா எழுந்தருளி ஏரியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார் தொடங்கி வைத்தார். மேலும், ஏரிக் கரையில் இருந்தவாறு பக்தர்கள் தெப்பத்தை பார்த்து வழிபட்டனர். ஏற்பாடுகளை, தர்மராஜா கொத்தப்பள்ளி ஊர் கவுண்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago