சென்னை: மாநகராட்சி சார்பில் மரக் கழிவுகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதன் மூலம் சுமார் 12 ஆயிரம் டன் மரக் கழிவுகள் குப்பைக் கிடங்குகளுக்கு செல்ல இருந்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் தினந்தோறும் சுமார் 5,200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் இல்லக் கழிவுகள், தொழில்நிறுவன கழிவுகள், உணவுக் கழிவுகள், தாவரக் கழிவுகள் போன்றவை உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கழிவுகள் வகை பிரிக்கப்படாமல் கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வந்தன. இவ்விரு இடங்களிலும் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதனால், அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக குப்பையை வகை பிரித்து, மறுசுழற்சிக்கு உகந்தவற்றை தனியே பிரித்தெடுத்து, இயற்கை உரமாக மாற்றுவது, சமையல் எரிவாயு தயாரிப்பது, பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மாற்று வகை பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி பகுதிகளில் புயல் போன்றவற்றால் சாயும் மரங்களின் கழிவுகள், அவ்வப்போது இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டும்போது கிடைக்கும் கழிவுகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன் கூறியதாவது:
மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் அடிப்படையில், மரக் கழிவுகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, இயந்திரத்தை நிறுவுவது, இயக்குவது, ஊழியர்கள் செலவு, மின்சார செலவு ஆகியவற்றை தனியார் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். மாநகராட்சி சார்பில் கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் இடம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இரு இடங்களிலும் கடந்த ஓராண்டாக மரக்கழிவுகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 12 ஆயிரம் டன் மரக் கழிவுகள் மாற்று எரிபொருளாகவும், மரப் பலகைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. அவற்றை தனியார் நிறுவனமே விற்று வருவாய் ஈட்டி, தனது செலவுகளை ஈடுகட்டிக்கொள்ளும்.
மாநகராட்சி சார்பில் ஒரு டன் மரக் கழிவுகளை கையாள, டன்னுக்கு ரூ.650 வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் மரக் கழிவுகள், கிடங்குகளில் குப்பையாக கொட்டப்படும். இத்திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் 12 ஆயிரம் டன் மரக் கழிவுகள், குப்பை கிடங்குகளுக்கு அனுப்பப்படுவது தவிர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago