சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் குழு அவரை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் தரப்பில் கேட்டபோது, துரைமுருகனுக்கு வயோதிகம் காரணமாக ஏற்படும் வழக்கமான பாதிப்புதான், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இதய பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற துரைமுருகன், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago