கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | சாந்தோம், பெசன்ட் நகர் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு: ஏராளமானோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் விழா எளிமையாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பாடகர்களின் இன்னிசை கச்சேரியும் நடந்தது.

சாந்தோம் தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற
சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்.

கொட்டும் மழையில்.. பிரசித்திபெற்ற சாந்தோம், பெசன்ட் நகர் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அங்கு நடந்தசிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர், காலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தூய ஜார்ஜ் கதீட்ரல் ஆலயம், ராயப்பேட்டை சிஎஸ்சி வெஸ்லி தேவாலயம், அடையாறு சிஎஸ்ஐ இயேசு அன்பர் ஆலயம், புனித தோமையார் மலை தேவாலயம், ஆவடி அந்தோனியார் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலியும், நேற்று காலை சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்