சென்னை: தெற்கு ரயில்வே சார்பில், தாம்பரம் - நாகர்கோவில் இடையே அந்த்யோதயா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை கடந்த2018-ல் தொடங்கப்பட்டது பேருந்துகட்டணத்தைவிட குறைவாக இருப்பதால், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுபோல, தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்த்யோதயா ரயில் சேவையும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிட்டு, சோதனை முயற்சியாக ரயிலும் இயக்கப்பட்டது. ஆனால், ரயில் சேவை இன்னும் தொடங்கவில்லை. எனவே, இந்த வழித்தடத்தில் ரயில் சேவை உடனடியாக தொடங்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள்கூறியதாவது: தாம்பரம்-செங்கோட்டை வழித்தடத்தில் அந்த்யோதயா ரயில் சேவையை தொடங்கும் அறிவிப்பு வெளியிட்டு நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. அந்த அறிவிப்பு வெளியிட்டபிறகு, சோதனை முயற்சியாக ரயில் இயக்கப்பட்டது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம்.
ஆனால், இதுவரை ரயில் சேவை தொடங்கவில்லை. இது, பயணிகள் மத்தியில் ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் அந்த்யோதா ரயில் சேவை உடனடியாக தொடங்க வேண்டும் என்றனர்.
» தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை முதல் ‘டோக்கன்’ விநியோகம்
» சீனாவிலிருந்து திரும்பிய உ.பி.யை சேர்ந்தவருக்கு கரோனா தொற்று உறுதி
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago